ரசல், ராணா ருத்ரதாண்டவம்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !!

ரசல், ராணா ருத்ரதாண்டவம்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் கடந்த 7ம் தேதி துவங்கி இந்தியாவின் பல பகுதிகளில் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய லீக் போட்டியில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார், மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் லின் 31 ரன்கள் எடுத்து ஓரளவிற்கு கைகொடுத்தார்.

இதன் பின் வந்த உத்தப்பா 39 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 19 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன் பின் கூட்டணி சேர்ந்த ரசல் – ராணா ஜோடி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாளா புறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரியூ ரசல் 12 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார், மறுமுனையில் நிதிஷ் ராணாவும் 35 பந்துகளில் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

 

அடுத்தடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக திவேதியா 3 விக்கெட்டுகளையும், பவுல்ட் மற்றும் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து ரசல் மற்றும் ராணாவின் இந்த அதிரடி ஆட்டத்தை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் சில;

 

Mohamed:

This website uses cookies.