டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 23, இரவு 8 மணியளவில்
எங்கே : ஃபெரோஸ் ஷா கோட்லா, புது தில்லி
வானிலை என்ன : மழைப் பெய்ய வாய்ப்பு எதுவும் இல்லை, மாலை நேரத்தில் 20 டிகிரி வெப்பம் இருக்கும்.
நேருக்கு நேர் : கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 12 – டெல்லி டேர்டெவில்ஸ் 9
மைதானத்தில் : கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 4 – டெல்லி டேர்டெவில்ஸ் 5
டெல்லி டேர்டெவில்ஸ் : ஜேசன் ராய், கௌதம் கம்பீர் (கே), ஷ்ரியாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் (வி), க்ளென் மேக்ஸ்வெல், ராகுல் திவாடியா, கிறிஸ் மோரிஸ், விஜய் ஷங்கர், ஷாபாஸ் நதேம், ஹர்ஷல் படேல், ட்ரென்ட் போல்ட், கொலின் முர்ரோ, முகமது ஷமி அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, அவேஷ் கான், டேனியல் கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மேன், மஞ்சோத் கல்ரா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லேமிச்சேன், நாமன் ஓஜா, சயான் கோஷ், லியாம் பிளன்கெட்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : லோகேஷ் ராகுல் (வி), கிறிஸ் கெயில், மாயங்க் அகர்வால், கருன் நாயர், ஆரோன் பிஞ்ச், யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கே), கேட்ச் ஆண்ட்ரூ டை, பரேண்டர் ஸ்ரான், அங்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், ஆக்ஸார் படேல், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், மனோஜ் திவாரி, மோஹித் சர்மா, அக்ஷ்திப் நாத், பென் டிவாஷுஷிஸ், பார்டீப் சாகு, மயங்க் தாகர், மஞ்சூர் தார்

ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 23) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணி இந்த தோல்விகளில் இருந்து மீண்டு, தன்னை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது. இதற்கிடையே பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டி, டெல்லி அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வென்று, தன் வெற்றியின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி உயர்த்த முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டி, பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் மிக மோசமான துவக்கத்தை பெற்றிருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவது டெல்லி அணியின் அடுத்தடுத்த போட்டிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கும். டெல்லி அணி தனது பேட்டிங்கை விட பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான கெயில் மற்றும் இராகுலின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. அவர்கள் துவக்கத்தில் அதிரடியாக சேர்க்கும் ரன்களால் பஞ்சாப் அணி மிக எளிதாக வெற்றிப் பெற்றுவிடுகிறது.

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள், பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் போட்டி விறுவிறுப்பாக அமையும்.

இதுவரையில் நடந்த போட்டிகளில், இரு அணிகளின் செயல்பாடுகளை கொண்டு பார்க்கும்போது பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

T Aravind:

This website uses cookies.