எப்பொழுது : மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ஏப்ரல் 24, 2018, இரவு 8 மணியளவில்.
எங்கே : வான்கடே ஸ்டேடியம், மும்பை
வானிலை என்ன : மழை அறிகுறிகள் இல்லை. ஈரப்பதமானது 47% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, வெப்பநிலை 30-33 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
நேருக்கு நேர் : மும்பை இந்தியன்ஸ் 5 – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 6
மைதானத்தில் : மும்பை இந்தியன்ஸ் 3 – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 0
மும்பை இந்தியன்ஸ் : சூர்யகுமார் யாதவ், எவின் லீவிஸ், இஷான் கிஷான் (வி), கியொர்ன் போலார்ட், ரோஹித் ஷர்மா(கே), கிருஷ்ண பாண்டியா, ஹார்டிக் பாண்டியா, மிட்செல் மெக்லெனகான், மாயன்க் மார்க்கண்டே, ஜாஸ் ப்ரிட் பம்ரா, முஸ்தாபிஜூர் ரஹ்மான், ராகுல் சாஹார், சவுராத் திவாரி , பேன் கட்டிங், பிரதீப் சாங்வான், ஜீன்-பால் டுமினி, தாஜீந்தர் சிங், ஷரத் லும்பா, சித்தீஷ் லேட், ஆதித்யா தாரே, அகிலா டான்ஜாயா, அனுகுல் ராய், மொஹ்சீன் கான், எம்.டி. நிதேஷ், ஆடம் மில்னே.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கேன் வில்லியம்சன் (கே), ஷிகார் தவான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன், யூசுப் பத்தான், விருதிமன் சஹா (வி), ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல், ரிக்கி பூய், அலெக்ஸ் ஹேல்ஸ், கார்ஸ் ப்ரத்வாட், கிறிஸ் ஜோர்டான், முகம்மது நபி, டி நத்தராஜன், பசில் தம்பி, கே.கேலேல் அகமது, சந்தீப் சர்மா, சச்சின் பேபி, தண்மே அகர்வால், ஸ்ரீவேதஸ் கோஸ்வாமி, பிபுல் சர்மா, மெஹ்தி ஹசன்.
ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவர் வரை போராடி மீண்டும் தோல்வியைத் தழுவியது. 4 போட்டிகளில் தோல்வியை தழுவி தத்தளித்து வரும் அந்த அணி, ஹைதராபாத் அணியுடான இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும் என எதிர்ப்பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறது. இருப்பினும் மும்பை அணியின் அனைத்து தோல்விகளும் கடைசி ஓவரிலே தான் நிகழ்ந்தது. இதனால் அந்த அணி வெற்றிப் பாதைக்கு விரைவில் திரும்பும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனை ஹைதராபாத் அணியுடனான போட்டியில் இருந்து துவங்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.
ஹைதராபாத் அணி இந்த ஐ.பி.எல். தொடரை மூன்று வென்றிகளுடன் சிறப்பாகவே தொடங்கியது. கடைசி இரண்டு போட்டிகளின் தோல்வி அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் அணி இறுதிவரை போராடியது, அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும். மீண்டும் வெற்றியை தொடர அந்த அணி போராடும் என எதிர்ப்பார்க்கலாம்.
இரு அணிகளையும் பார்க்கும்போது, இந்த போட்டி கடுமையானதாகவே அமையும். இருப்பினும் மும்பை அணி வான்கடே மைதானத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதால், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.