ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில்
எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
வானிலை என்ன : ஹைதராபாத்தில் தற்போது கோடைகாலம் நிகழ்வதால், போட்டி நடைபெறும் நாள் வெப்பம் மிகுந்த நாளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 3
மைதானத்தில் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 1

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஷிகர் தவான், கேன் வில்லியம்சன் (சி), விருதிமன் சாஹா(வி), மனிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான், முகமது நபி, ரஷீத் கான், பசில் தம்பி, சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் ஜோர்டான், அலெக்ஸ் ஹேல்ஸ், கார்லோஸ் ப்ரத்வாட், ரிக்கி பூய், தீபக் ஹூடா, டி நடராஜன், கே காலேல் அகமது, சச்சின் பேபி, தண்மே அகர்வால், ஸ்ரீவேதஸ் கோஸ்வாமி, பிபுல் சர்மா, மெஹ்தி ஹசன்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : லோகேஷ் ராகுல் (வி), ஆரோன் பிஞ்ச், மாயன்க் அகர்வால், கருன் நாயர், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், ரவிச்சந்திரன் அஷ்வின் (சி), ஆண்ட்ரூ டை, பேரிடர் ஸ்ரான், அங்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், கிறிஸ் கெய்ல், ஆக்ஸார் படேல், மார்கஸ் ஸ்டோனிஸ், மனோஜ் திவாரி, மோகித் சர்மா, அக்ஷ்திப் நாத், பென் த்வார்ஷுஷிஸ், பாரீப் சாகு, மயங்க் தாகர், மஞ்சூர் தார்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத் அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியையும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 2 தோல்வியை பெற்ற அந்த அணி மும்பை உடனான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் வெற்றி பெற்றது. தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் அணியுடான போட்டியில் போராடும் என எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் வென்று, தன் வெற்றியின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி உயர்த்த முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டி, பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இது இந்த தொடரில் இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டியாகும். முன்னதாக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் க்றிஸ் கெயில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளை பெற்று, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஹைதராபாத் அணியின் செயல்பாடும் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் ஹைதராபாத் அணியின் பலமாக பந்துவீச்சே உள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியின் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில், பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இருப்பினும் இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் அணியின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

T Aravind:

This website uses cookies.