எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல் 27 இரவு 8 மணியளவில்
எங்கே : பெரோஸா கோட்ல, டெல்லி
வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் : டெல்லி டேர்டெவில்ஸ் 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13
டெல்லி டேர்டெவில்ஸ் : ப்ரத்வி ஷா, கௌதம் கம்பீர், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரியாஸ் ஐயர்(கே), ரிசாப் பன்ட் (வி), டேனியல் கிறிஸ்டியன், ராகுல் டிவாடியா, லியாம் பிளங்குட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ட்ரென்ட் பவுல்ட், ஷாபாஸ் நதேம், கிறிஸ் மோரிஸ் , ஜேசன் ராய், கொலின் முர்ரோ, முகமது ஷமி, விஜய் ஷங்கர், ஹர்ஷால் படேல், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மன், மஞ்சோத் கல்ரா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லேமிச்சேன், நாமன் ஓஜா, சயான் கோஷ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கே/வி), விக் கேட்ச், ஆண்ட்ரே ரஸல், ஷுப்மான் கில், டாம் குர்ரான், பியுஷ் சாவ்லா, ஷிம்மா மாவி, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், இஷாக் ஜாக்ஜி , பிரசீத் கிருஷ்ணா, வினய் குமார், அபூர் வன்காதே, ரிங்கு சிங், கேமரூன் டெல்போர்ட், ஜாவோன் சீரிஸ்
ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 27) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணி இந்த தோல்விகளில் இருந்து மீண்டு, தன்னை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது. இதற்கிடையில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த காம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் டெல்லி அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.
கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்றுள்ளது.இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் வெற்றியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற போட்டியி டெல்லி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியின் சிறந்த அணியாக இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அந்த அணியால் வெற்றியை பெற முடியவில்லை. எனவே இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடும் என எதிர்ப்பார்க்கலாம்.
டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். எனவே இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இரு அணிகளின் சமீபத்திய செயல்பாடுகளைக் கொண்டு பார்க்கும்போது இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். டெல்லி அணி வெற்றி பெற்றால் இந்த ஐ.பி.எல். தொடர் சுவாரஸ்யமாக அமையும்.