டிவில்லியர்ஸ் இல்லை; டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா
ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா பெங்களூர் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய இரண்டாம் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான பெங்களூர் அணியில் உடல்நிலை சரியில்லாததால் டிவில்லியர்ஸ் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் வாசிங்டன் சுந்தர் மற்றும் நெகி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வோஹ்ரா மற்றும் முருகன் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளது.
இந்த போட்டிக்கான பெங்களூர் அணி;
டி.காக், விராட் கோஹ்லி, மனன் வோஹ்ரா, கோரி ஆண்டர்சன், மந்தீப் சிங், கோலின் டி கிராண்டதோம், முருகன் அஸ்வின், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இந்த போட்டிக்கான கொல்கத்தா அணி;
கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மன் கில், ஆண்ட்ரியூ ரசல், சிவம் மாவி, பியூஸ் சாவ்லா, மிட்செல் ஜான்ச்சன், குல்தீப் யாதவ்.