கையில் காசே இல்லாமல் கிறிஸ் கெய்லை ஆட்டயபோட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் !!

 கையில் காசே இல்லாமல் கிறிஸ் கெய்லை ஆட்டயபோட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் !!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடைசியாக இருந்த பணத்தில் கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது

இதில் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத கிறிஸ் கெயில், சூறாவளியாக சுத்தி சுத்தி அடிக்கிறது. இவர் இரண்டு முறை ஏலத்தில் விலை போகாத போது, கடைசி முறையாக ஏலத்தில் வந்த போது சேவக்கின் கருணையால் பிரீத்தி ஜிந்தா இவரை அடிப்படை தொகைக்கு ஏலத்தில் எடுத்தார்

இந்நிலையில் கடைசியாக கைவசம் இருந்த ரூ. 2.1 கோடியில் தான் கெயிலை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி கூறுகையில்,‘ஐபிஎல்., ஏலத்தின் போது எங்கள் கைவசம் ரூ. 2.1 கோடி தான் மீதம் இருந்தது. இருந்தாலும் துணிச்சலாக ஏலம் கேட்டோம். வேறு யாரும் அவரை ஏலத்தில் கேட்க போட்டி போடவில்லை. அதனால், அதிர்ஷ்டவசமாக எங்கள் அணிக்கு வந்தார்.’ என்றார்

கெய்லை நம்பியே பயணிக்கும் பஞ்சாப்;

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஒவ்வொரு போட்டியின் வெற்றியிலும் கெய்ல் பெரும் பங்காற்றி வருகிறார். இவரை நம்பி மட்டும் தான் பஞ்சாப் அணி உள்ளது என்று சொல்லும் அளவிற்கு தான் பஞ்சாப் அணியின் நிலைமை உள்ளது. இவர் அடித்தால் இமாலய வெற்றி பெறும் பஞ்சாப் அணி, இவர் ஒரு போட்டியில் சொதப்பி விரைவில் விக்கெட்டை இழந்துவிட்டால் மிக மோசமான தோல்விகளை சந்திக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஹைதராபாத் – பஞ்சாப் இடையேயான போட்டி.

ஹைதராபாத் அணியுடனான தோல்வி குறித்து அஸ்வின் கூறியதாவது;

இந்த தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிக விரைவில் விக்கெட்டை பறிகொடுத்ததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. டி.20 போட்டிகளை பொறுத்தவரையில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது கடினம் தான் என்றாலும், இந்த போட்டியில் பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகள் மிகவும் மோசமானது. மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கும் லைட்டின் வெளிச்சத்தால் சில கேட்சுகளை பிடிப்பது கடினம் தான் என்றாலும், நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள், எங்களது தொழில் இது தான், அதனால் இதற்கு மன்னிப்பே கிடையாது. நிச்சயம் பஞ்சாப் அணியின் பீல்டிங்கில் நிறைய முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும். அடுத்த போட்டிக்கு இன்னும் 7 நாட்கள் இருப்பதால் அது நாங்கள் மீண்டு வருவதற்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஹைதராபாத் அணியின் ரசீத் கான் மிக அற்புதமாக பந்துவீசினார், அவர் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர், மிடில் ஓவர்களில் அவரது சுழலில் சிக்கியே நாங்கள் மிக விரைவில் விக்கெட்டை இழந்துவிட்டோம்என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.