தன்னை திட்டிய நிதிஷ் ராணாவிற்கு பேட்டை பரிசளித்த கோஹ்லி  !!

தன்னை திட்டிய நிதிஷ் ராணாவிற்கு பேட்டை பரிசளித்த கோஹ்லி  !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் நிதிஷ் ராணாவிற்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒரே ஓவர் வீசி அவர் இரண்டு விக்கெட் எடுத்தார். அதே போல் பேட்டிங்கில் அவர் 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம்.

தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா, டெல்லியை சேர்ந்தவர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் கோஹ்லி விக்கெட்டை வீழ்த்தினார். அவர் கோஹ்லி விக்கெட்டை எடுத்த போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். கோஹ்லியை பார்த்து மோசமான வார்த்தைகளில் கத்தினார். எப்போதும் கோபமாக செயல்படும் கோஹ்லியே அதைப்பார்த்து அமைதியாக சென்றார்.

அடுத்ததாக கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய வந்த போது, பெங்களூர் வீரர் குல்வந்த் ஓவரில் நிதிஷ் ராணா சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் மைதானத்தில் கடைசி இடத்தில் இருந்த ரசிகர்களிடம் சென்று விழுந்தது. இதை பார்த்து கோஹ்லி ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். அவரது பேட்டிங் கோஹ்லியை அதிகம் கவர்ந்துள்ளது.


இந்த நிலையில் அவரது பேட்டிங் திறனை பார்த்து கோஹ்லி அவருக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து இந்த பரிசை வழங்கியுள்ளார். இதனால் கோஹ்லிக்கு அவர் மீது எந்த விதமான கோபமும் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதை பலரும் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நிதிஷ் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “கோஹ்லியை போன்ற ஜாம்பவானிடம் இருந்து இந்த பரிசை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு, புதிய உத்வேகத்தையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது. நன்றி கோஹ்லி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.