எங்கள் அணியில் சந்தீப் இல்லாதது எங்களுக்கு வருத்தம் தான் : ஏல அழகி ப்ரீத்தி ஜிந்தா
சந்தீப் சர்மா இல்லாதது எனக்கு மனது உடைந்தார் போல உள்ளது. அவரை செல்லவிட்டது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் அவருக்காக ஒரு பெரிய போர் நடந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என சந்தீப் சர்மாவை மிஸ் செய்வதாக ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.
ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடி கொடுத்து வாங்கியது. அடுத்தப்படியாக 11.5 கோடி ரூபாய் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை வாங்கியது. இந்த சீசன் ஏலத்தில் இதுதான் மிக அதிகமான தொகையாகும்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களும், அதிக சிக்சர்களும், அதிக சதங்களும் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவரும் ஆன கிறிஸ் கெய்லின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த கிறிஸ் கெய்லை, அந்த அணி தக்க வைக்கவில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பராஸ் கான் ஆகியோரை தக்க வைத்திருந்தது.
நேற்றைய முதல் நாள் முக்கியமான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அவரை எந்த அணி உரிமையாளர்களும் எடுக்கவில்லை. இரண்டு மூன்று சுற்றுகள் வந்த போதிலும் அவரை யாரும் எடுக்கவில்லை. இன்றைய 2-வது நாளில் ஏலம் முடிவடைவதற்கு முன் மீண்டும் ஒருமுறை ஏலத்திற்கு வந்தார்.