ஸ்டீவ் ஸ்மித்தை நீக்கிய நிலையியல் , ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். மேலும்., ஸ்டீவ் ஸ்மித்திற்கு மாற்று வீரர் தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் க்லீசன் தான் எனவும் உறுதி செய்துள்ளார் ரகானே.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது.
இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த வியாழக்கிழமை தாய்நாடு திரும்பிய மூன்று வீரர்களும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்க மக்களிடமும் கிரிக்கெட் நிர்வாகிகள், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் மண்ணில் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளேன். தென் ஆப்பிரிக்கா அருமையான கிரிக்கெட் தேசம்.
ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதன் மூலம் நாட்டுக்குப் பெருமைத் தேடித்தரத்தான் எப்போதும் முயல்வேன். அதற்கான ஒரு முயற்சியில் ஈடுபடும்போது எதிர்விளைவுகள் உண்டாகும்படியான
தவறைச் செய்துவிட்டேன். என் வாழ்நாள் முழுக்க இந்தத் தவறுக்காக வருந்துவேன்.
நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை துளிர் விடுகிறது. அதேசமயம் இனி நான் விளையாட முடியாது என்கிற உண்மையை உணர்ந்தே உள்ளேன்.
தவறு எப்படி நடந்தது என்று என்னை ஆய்வுக்கு உட்படுத்துவேன். இதுகுறித்த தகுந்த ஆலோசனைகளை நாடுவேன்.