அது எல்லாம் நடக்காதுன்னு எனக்கு அப்பவே தெரியும்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது குறித்து தான் யோசிப்பது கூட இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலத்தில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடிய அம்பத்தி ராயூடுவை, இந்த முறை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளது குறித்து அம்பத்தி ராயூடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்பத்தி ராயூடு கூறியதாவது, “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளூக்காக இந்திய அணியில் இனி எனக்கு இடம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சமீப காலமாக நான் அதை பற்றி யோசிப்பது கூட இல்லை, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார், ஹைதரபாத் அணிக்கு அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கொடுத்துள்ளது, அது போதும் எனக்கு. சென்னை போன்ற ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியில் விளையாட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, நிச்சயம் அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவிற்கு கைகொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.