பச்சை நிற ஜெர்சியில் பட்டையை கிளப்புமா பெங்களூர்..? முதலில் பேட்டிங்

பச்சை நிற ஜெர்சியில் பட்டையை கிளப்புமா பெங்களூர்..? முதலில் பேட்டிங்

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடரில் ராஜஸ்தான் பெங்களூர் இடையேயான இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் கடந்த 7ம் தேதி துவங்கி இந்தியாவின் பல பகுதிகளில் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான பெங்களூர் அணியில் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பவன் நேகி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளது.

இந்த போட்டிக்கான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;

குவிண்டன் டி காக், பிராண்டன் மெக்கல்லம், விராட் கோஹ்லி, ஏ.பி டிவில்லியர்ஸ், மந்தீப் சிங், வாசிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ், பவன் நேகி, குல்வந்த் கெஜிரோலியா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

அஜிக்னியா ரஹானே, டி ஆர்கி ஷார்ட், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ராகுல் த்ரிபதி, கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயஸ் கோபால், தல்வால் குல்கர்னே, ஜெயதேவ் உனாட்கட், பென் லாக்லின்.

 

Mohamed:

This website uses cookies.