Use your ← → (arrow) keys to browse
ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ள வீரர்கள்..
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளதால் ஒவ்வொரு அணியும் இந்த தொடரை எதிர்கொள்ல முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டிய வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
7., முரளி விஜய்;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரரான முரளி விஜய் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் வெறும் 56 பந்துகளில் 127 ரன்கள் குவித்து மிரள வைத்தார். அந்த ஒரே போட்டியில் முரளி விஜய் 11 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse