சன்ரைசர்ஸ் அணி தக்க வைக்க நினைக்கும் மூன்று வீர்ரகள்
அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான மூக்கு ஏலம் நெருங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் மூன்று வீர்களின் பட்டியலை தயார் செய்ய வெகுவாக யோசித்து வருகிறது. ஜனவரி 27 மற்ரும் 28ல் முழு ஏலம் நடைபெறுகிறது. ஆனால் முன்னர் ஒவ்வொரு அணியின் தங்கள் அணி தக்க வைக்கும் வீர்ரகள் பட்டியலில் ஜனவரி 4க்குள் கண்டிப்பாக ஐ.பி.எல் கமிட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த லிஸ்ட்டில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட மூன்று வீரர்களை தேர்வு செய்துவிட்டதாக தெரிகிரது.
2016ல் ஐ.பி.எல் பட்டத்தை தட்டி சென்ற அணியான இது, இந்த வருடமும் பட்டத்தை வெல்ல முழு மூச்சுடன் காத்திருக்கிறது. ஆனால அதற்கு முன்னர் முழு ஏலத்தில் பங்கு கொண்டு சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும்.
சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்திற்கு நெருங்கிய நபர்கள் கூறிய தகவலின் படி
சிகர் தவான், கேப்டன் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
வீரர்கள் தக்க வைக்கும் விதியின்படி, ஒரு ஐ.ஒய்.எல் அணி தங்கள் கடைசியாக விளையாடிய அணியிக் இருந்து
- அதிகபட்சமாக 3 இந்திய அணிக்கு விளையாடிய வீர்ரகள்
- அதிகபட்சமாக இரண்டு வெளிநாட்டு வீர்ரகள்
- அதிக பட்சமாக இரண்டு இந்திய உள்ளூர் வீர்ரகள்
ஆகியோர் தேர்வு செய்யலாம். இந்த வீதியில் இருந்து ஏலத்திற்கு முன்னர் மூன்று வீரர்களை தேர்வு செய்து நம் அணிக்கு வைத்துக்கொள்ளலாம். அதே போல், தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான முழு பணமும் முந்தைய ஐ.பி.எல் மதிப்பாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தில் கொடுக்கப்படும் ₹ 80 கொடியில் இருந்து அந்த வீரர்களில் மதிப்பு கழிக்கப்பட்டு மீதம் உள்ள பணத்தை வைத்து ஏலம் எடுக்க விடப்படும்.
இந்த மொத்த செலவு 2017ஆம் ஆண்டு தொடருக்கு ₹ 80 கோடியாகவும், 2018ஆம் ஆனபியூ தொடருக்கு ₹ 82 கோடியாகவும், 2019ஆம் ஆண்டு தொடருக்கு ₹ 85 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.