தல தோனிக்காக ஐ.பி.எல் கோப்பையை வெல்வோம்; சுரேஷ் ரெய்னா
சென்னை அணியின் கேப்டன் தோனிக்காக இந்த முறை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல விரும்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2018 சீசனின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது. இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 9 வருடமாக இருந்து வரும் எம்எஸ் டோனிக்காக கோப்பையை வெல்ல இருக்கிறோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் டோனி அதிக அளவில் அக்கறை எடுத்து வருகிறார். நாங்கள் எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகிறோம். 2008-ல் இருந்து சென்னை அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மிகவும் சிறந்த நபராக வளம் வருகிறார். ஆகவே, இந்த முறை டோனிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல விரும்புகிறோம்’’ என்றார்.
“எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனையையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார். நிச்சயம் தோனிக்காக இந்த முறை சாம்பியன் கோப்பையை வெல்லும்” என்றார்.