ஐ.பி.எல் 2018; அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 7ம் தேதி துவங்கிய இந்த தொடரில் நேற்று வரை மொத்தம் 24 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்கும், அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவதற்கும் கடுமையாக போராடி வரும் நிலையில், மறுபுறம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவதன் மூலம் கிடைக்கும் ஊதா நிற தொப்பிக்கும் கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப் 5 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
5., டிரண்ட் பவுல்ட்;
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிரண்ட் பவுல்ட், டெல்லி அணி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தாலும் தனது அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். இதுவரை இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.