மீண்டும் மாஸ் காட்டிய தல தோனி; கொண்டாடும் சென்னை ரசிகர்கள் !!

மீண்டும் மாஸ் காட்டிய தல தோனி; கொண்டாடும் சென்னை ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா அணியுடனான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 36 ரன்களும், டூ பிளசிஸ் 27 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

 

இதனையடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 31 ரன்களிலும், அம்பத்தி ராயூடு 21 ரன்களில் விக்கெட்டை  இழந்து வெளியேறினாலும், அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தல தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 178 ரன்கள் எடுத்துள்ளது.

தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதில் சில;

 

Mohamed:

This website uses cookies.