ராஜஸ்தானிற்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத்; ட்விட்டர் ரியாக்சன்
ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஷிகர் தவான் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.
இதன் பின் கூட்டணி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் – கேன் வில்லியம்சன் கூட்டணி ஹைதராபாத் அணியை சரிவில் இருந்து மீட்டு நிதானமாக ரன் சேர்த்தது.
கேன் வில்லியம்சன் 63 ரன்களும், வில்லியம்சன் 45 ரன்களும் எடுத்து தங்களது பங்களிப்பை சரியாக செய்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் வழக்கம் போல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 151 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த போட்டி குறித்து ட்விட்டர் ரியாக்சன்;