ராட்சனாக மாறிய ரசீத் கான்; கவலையில் கொல்கத்தா ரசிகர்கள் !!

ராட்சனாக மாறிய ரசீத் கான்; கவலையில் கொல்கத்தா ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் முதல் தகுதிசுற்று போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்றைய இரண்டாம் தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஷிகர் தவான் 34 ரன்களும், சஹா 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும் பின்னர் வந்த வீரர்களில் ஷாகிப் அல் ஹசனை(28) தவிர மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 138 ரன்களுக்கே ஹைதராபாத் அணி தனது பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டையும் இழந்தது.

இதனால் ஹைதராபாத் அணி எப்படியும் 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் ரசீத் கான் யாரும் எதிர்பாராத வகையில் கொல்கத்தாவின் பந்துவீச்சை மைதானத்தில் நாளா புறமும் பறக்கவிட்டு 10 பந்துகளில் 34 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டி குறித்து ட்விட்டர் வாசிகளின் கருத்து;

Mohamed:

This website uses cookies.