வீடியோ; அசத்தல் கேட்ச் பிடித்து பட்டையை கிளப்பிய பஞ்சாப் வீரர்கள் !!

வீடியோ; அசத்தல் கேட்ச் பிடித்து பட்டையை கிளப்பிய பஞ்சாப் வீரர்கள்

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் ஆகியோர் இணைந்து சாமர்த்தியமாக கேட்ப் பிடித்தனர்.

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. நேற்று இந்தூரில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 13-வது ஓவரை பஞ்சாப் வீரர் முஜீப் உர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை ராஜஸ்தான் வீரர் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். இந்த பந்தை ஸ்டோக்ஸ் சிக்சர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார்.

ஆனால் பவுண்டரி அருகே நின்ற பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால், சரியான நேரத்தில் தாவி பிடித்தார். ஆனால் அவரால் மைதானத்திற்குள் சரியாக வர முடியவில்லை. இதனால் அவர் பவுண்டரி கோட்டை கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த பரபரப்பான கட்டத்தில் சுதாரித்துக்கொண்ட மயன்க், பந்தை சக வீரர் மனோஜ் திவாரியிடம் வீசிவிட்டு எல்லைக்கோட்டை கடந்து விழுந்தார். இந்த பந்தை மனோஜ் திவாரி பிடிக்க, ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

வீடியோ;

இதன்மூலம், மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர். அவர்கள் இருவரையும் பஞ்சாப் அணியினர் பாராட்டினர். இதுவரை நடந்த ஐபிஎல். போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் இந்த ஜோடி பிடித்த கேட்ச் மிகச்சிறந்த கேட்ச்சாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது

Mohamed:

This website uses cookies.