ஹர்பஜன் சிங் இல்லாது வருத்தம் தான்; ரோஹித் சர்மா !!

ஹர்பஜன் சிங் இல்லாது வருத்தம் தான்; ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இல்லாதது சிறிய வருத்தம் தான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் இந்த தொடரை எதிர்கொள்வதற்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்காக சமீபத்தில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில், ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை இந்த முறை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் எடுத்து கொண்டது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பை அணியில் ஹர்பஜன் சிங்கை மிஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது  “இந்த தொடரில் ஹர்பஜன் சிங்கை மிஸ் செய்ய போகிறோம், அவருடன் சேர்த்து அவரின் அனுபவத்தையும், ஆற்றலையும் இழக்க போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடருக்காக சமீபத்தில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில், ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை இந்த முறை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் எடுத்து கொண்டது.

Mohamed:

This website uses cookies.