ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து மேலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்
ஆரோன் பின்ச் மற்றும் மேக்ஸ்வெல்லை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆக்யோரும் ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான ஏலத்தில் இருந்து விலகியுள்ளனர்.
அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் 2010 தொடர் நடைப்பெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு வீரரும் தாங்கள் அணியில் இடம் பெற வேண்டும் என தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் இதற்கு முன்னெடுப்பான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, காயம் மற்றும் பணி சுமையை குறைத்துக் கொள்ளும் பொருட்டு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2019 தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளதாக மும்பை மிரர் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் 2018 தொடரின் போது ஸ்டார்க் ரூ.9.4 கோடிக்கு கொல்கத்தா அணியும், கம்மின்ஸ் ரூ. 5.4 கோடிக்கு மும்பை இந்தியன் அணியும் வாங்கியிருந்தது. ஆனால் இருவரும் காயம் காரணமாக விளையாட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் விலகல்;
உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் என்று 2019-ம் ஆண்டின் தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியான ஷெட்யூல் இருப்பதால் ஐபிஎல் வேண்டாம் என்று கிளென் மேக்ஸ்வெலும், ஏரோன் பிஞ்சும் முடிவெடுத்துள்ளார்கள்.
மேக்ஸ்வெலை டெல்லி டேர் டெவில்ஸ் (இப்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணி விடுவித்தது, ஏரோன் பிஞ்ச்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்தது. இருவருமே பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்.
இம்முறை ஏலத்தில் உள்ள பெரிய வீரர்களில் டேல் ஸ்டெய்ன், மெக்கல்லம், டி ஆர்க்கி ஷார்ட், கோரி ஆண்டர்சன், ஜெய்தேவ் உனாட்கட், யுவராஜ் சிங், ஷமி, அக்சர் படேல், சர்பராஸ் கான், சஹா, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.