தடுமாறி வரும் பெங்களூரு அணியில் இணைகிறார் ஆஸ்திரேலியா நட்சத்திர ஆல்ரவுண்டர்!!

இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர் தோல்வியடைந்து வருகிறது. பருவத்தின் முதல் மூன்று போட்டிகளிலும் அவர்கள் தோல்வியடைந்தனர், இதன் விளைவாக, புள்ளிபட்டியலில் கீழே தள்ளப்பட்டனர். ஏப்ரல் 2 ம் தேதி சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) அணியை எதிர்கொள்கையில் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்தை பெற இருக்கிறார்கள்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பார்திவ் படேல் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கே வெளியேறி மோசமான தோல்வியை சந்தித்தனர்.

ஆந்திர

இதற்கிடையில், இரண்டாவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸ் வீரியமிக்க முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் நெருக்கமாக தோல்வியை தழுவியது. பும்ராஹ் மற்றும் மலிங்கா இருவரின் சிறப்பான பந்துவீச்சும் இவர்களின் தோல்விக்கு காரணம்.

மூன்றாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிற்கு எதிராக. டேவிட் வார்னர் மற்றும் ஜானி பியர்ஸ்டோவ் ஆகியோர் சதமடிக்க 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்தனர். நபி 4 விக்கெட்டுகள் வீழ்த்த 113 ரன்கள் மட்டுமே வீழ்த்தி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பெங்களூரு அணிக்கு மேலும் பலம் சேர்க்க, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முகாமில் சேர உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் அவர் இருந்தார். அவர் மிகவும் கஷ்டப்பட்டாலும், ஸ்டோனிஸ் இந்தியாவுக்கு எதிரான முந்தைய தொடரில் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட் மற்றும் பௌல் இரண்டிலும் சிறப்பாக ஆட கூடியவர் மற்றும் அதை தொடர்ந்து செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான அதிர்ஷ்டத்தை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.