ஐ.பி.எல் 2019; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விபரம் !!

ஐ.பி.எல் 2019; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விபரம்

2019ம் ஆண்டு தொடருக்கான ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறைய வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டு இந்திய வீரர்களை மட்டும் ஏலம் எடுத்து, பழைய வீரர்களை அப்படியே தக்க வைத்துக்கொண்டது. அதில் ஒருவர் மோகித் சர்மா, இவரை ரூபாய் 5 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்கஸ். வேகப் பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில ஆண்டுகளுக்கு முன் விளையாடியுள்ளார்.

இன்னொரு இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாடை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் 2019 சீசன் ஏலத்தில் கலந்து கொண்ட 351 வீரர்களில் 60 வீரர்களை மட்டுமே அணிகள் தேர்ந்தெடுத்து உள்ளன. இதில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை 40.

மீதம் 20 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த ஐபிஎல் ஏலத்தில் எதிர்பாராதவிதமாக சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 இல் அணியில் இருந்த மூன்று வீரர்கள் மட்டுமே அணியில் இருந்து வெளியே அனுப்பியது. இதனால், அதிகம் புதிய வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இல்லை.

அதேபோல மூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறையும் அதே நம்பிக்கையில் வயதான வீரர்களை வைத்துக்கொண்டே தில்லாக களமிறங்குகிறது. இம்முறையும் மகேந்திர சிங் தோனிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பதில் மாற்றமில்லை. ஆனாலும், வயதான வீரர்களை வைத்து சென்ற ஆண்டு வென்றது போல இந்தாண்டும் நடக்குமா என்றால் சந்தேகமாகத்தான் இருக்கிறது என்று சிஎஸ்கே ரசிகர்களை கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முழு விபரம்:
எம்.எஸ் தோனி (கேப்டன்)

பேட்ஸ்மேன் :
முரளி விஜய்
துருவ் சவ்ரி
பேப் டுபிளசிஸ் (தென் ஆப்ரிக்கா)
மோனு குமார்
சையத்யா பிஷ்னோய்
*ருத்ரஜ் கெய்க்வாட்

விக்கெட் கீப்பர்:
எம்.எஸ் தோனி (கேப்டன்)
அம்பதி ராயுடு
சாம் பில்லிங் (இங்கிலாந்து)
நாராயன் ஜெகதீசன்

ஆல்ரவுண்டர்
கேதார் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)
சுரேஷ் ரெய்னா
டுவைன் பிராவோ (வெ.இ)
கரண் சர்மா

பந்து வீச்சாளர்கள் :
ஹர்பஜன் சிங்
தீபக் சாகர்
கேஎம் ஆசிஃப்
சர்துல் தாகூர்
*மோஹித் சர்மா
இம்ரான் தாகிர் (தெ.ஆ)
லுங்கி இங்கிடி (தெ.ஆ)
மிச்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து)

 

Mohamed:

This website uses cookies.