புஜாரா ஐ.பி.எல் தொடரிலும் இடம்பிடிக்க வேண்டும்; அணில் கும்ப்ளே சொல்கிறார் !!

புஜாரா ஐ.பி.எல் தொடரிலும் இடம்பிடிக்க வேண்டும்; அணில் கும்ப்ளே சொல்கிறார்

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகனான சட்டீஸ்வர் புஜாரா ஐ.பி.எல் தொடரிலும் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகனான சட்டீஸ்வர் புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கினாலும் அவரால் இந்திய ஒருநாள் மற்றும் டி.20 அணிகளில் இடம்பிடிக்க முடியவில்லை.

சர்வதேச லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐ.பி.எல் போன்ற உள்ளூர் டி.20 தொடர்களிலும் புஜாரா கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

சையத் முஸ்தாக் அலி டிராபி போன்ற டி.20 தொடர்களில் புஜாரா அதிரடியாக விளையாடி தான் அனைத்து விதமான போட்டிகளில் விளையாடுவதற்கும் தகுதியானவன் தான் என பலமுறை நிரூபித்த்துவிட்ட போதிலும் ஐ.பி.எல் தொடரில் எந்த அணியும் அவரை விலைக்கு வாங்க முன்வருவது இல்லை.

இந்நிலையில், புஜாராவிற்கு வாய்ப்பு கிடைத்தால் ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனில் கும்ப்ளே கூறியதாவது;

இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது வேதனையான விசயம். குறிப்பாக இஷாந்த் சர்மா மற்றும் புஜாரா போன்ற சிறந்த வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் புறக்கணிக்கப்பட்டது ஏற்று கொள்ள முடியாதது. ஒருவழியாக இஷாந்த் சர்மா ஐ.பி.எல் தொடரில் இடம்பிடித்துவிட்டார், அவரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன், புஜாராவிற்கும் ஐ.பி.எல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும், வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் புஜாரா நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என்றார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்க முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா. டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா, அவரால் ஐ.பி.எல் போன்ற டி-20 போட்டியில் ரன்களைச் சேர்க்க முடியாது என்று பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.