ஆண்ட்ரியூ ரசல்ல பார்த்து எனக்கு பயம் கிடையாது; ஹர்பஜன் சிங் நம்பிக்கை
கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரியூ ரசலின் விக்கெட்டை வீழ்த்துவது தனக்கு பெரிய விசயம் கிடையாது என சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் கோலோச்சிய ஆரம்பித்த பின்னர் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார். எனினும் அவ்வப்போது அணியில் எடுக்கப்படுவதும் தூக்கப்படுவதுமாக இருந்தார். 2015ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை.
1998ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங், கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இளம் ஸ்பின்னராக மிரட்டினார். இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், 2015ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடினார்.
தோனி தலைமையிலான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் கோலோச்சிய ஆரம்பித்த பின்னர் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார். எனினும் அவ்வப்போது அணியில் எடுக்கப்படுவதும் தூக்கப்படுவதுமாக இருந்தார். 2015ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை.
இந்திய அணிக்காக பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 2003ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த 2 விக்கெட்டையும் வீழ்த்தியது ஹர்பஜன் தான். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும் அதேபோன்று பல முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஸ்பின்னர்களில் ஹர்பஜனும் ஒருவர்.
ஐபிஎல்லில் 2008 முதல் 2017 வரை 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், கடந்த சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவில் இணைந்தார். இந்த சீசனில் சிறப்பாக பந்துவீசிவருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் தொடக்கத்திலேயே வீழ்த்தினார். அதனால் அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் ஹர்பஜன் வென்றார்.
இந்த சீசனில் அசத்தலாக வீசிவரும் ஹர்பஜன் சிங், மீண்டும் இந்திய அணியில் இணையும் நம்பிக்கையில் உள்ளார். அவருக்கு தற்போது 38 வயது. அதுமட்டுமல்லாமல் குல்தீப், சாஹல் ஆகிய 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் தவிர ஜடேஜா இருக்கிறார். அஷ்வினும் மீண்டும் இந்திய அணியில் இணையும் நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் ஹர்பஜனுக்கான வாய்ப்புலாம் கிடைக்க வாய்ப்பே கிடையாது.
எனினும் தன்னை மீண்டும் இந்திய அணியில் அழைத்தால் அணிக்காக ஆட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.
அதே போல் கொல்கத்தா அணியுடனான நாளைய போட்டி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரியூ ரசலை கட்டுப்படுத்த முடியாது என்ற கவலை எனக்கு இல்லவே இல்லை. நான் 20 வருடங்களாக நான் விளையாடும் அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வருகிறேன். ஆண்ட்ரியூ ரசல் போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்துவது எனக்கு முடியாத விசயமாக தோன்றவில்லை” என்று தெரிவித்துள்ளார்.