ஹைதராபாத் அணிக்கு யார் கேப்டன்..? உண்மையை உடைத்த பயிற்சியாளர் டாம் மூடி !!

Photo by: Deepak Malik / IPL/ SPORTZPICS

ஹைதராபாத் அணிக்கு யார் கேப்டன்..? உண்மையை உடைத்த பயிற்சியாளர் டாம் மூடி

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகினால் புவனேஷ்வர் குமார் ஹைதராபாத் அணியை வழிநடத்தவே வாய்ப்புகள் அதிகம் என அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டதால் அவர் கடந்தாண்டு ஐபிஎல்  போட்டியில் விளையாடவில்லை. எனவே அவருக்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

முக்கிய வீரரான டேவிட் வார்னர் இல்லாத நிலையிலும், கடந்த தொடரில் ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திய கேன் வில்லியம்சனே இந்த தொடரிலும் ஹைதராபாத் அணியை வழிநடத்த இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டது.

எனவே அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, அவர் இல்லையென்றால் ஹைதராபாத் அணிக்கு  யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி சமீபத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்றில் கேன் வில்லியம்சன் அடுத்த இரு தினங்களுக்குள் ஹைதராபாத் அணியில் இணைவார் என்று பதிவிட்டிருந்தது.

ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், ஒருவேளை இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்படுவார் என ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாம் மூடி பேசியதாவது;

டேவிட் வார்னர் ஹைதராபாத் அணியின் சீனியர் வீரர் என்பது மட்டுமல்லாமல் அவர் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் மிக குறைவு. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கேன் வில்லியம்சன் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால் துணை கேப்டனான புவனேஷ்வர் குமாரே அணியை வழிநடத்துவார். இரண்டாவது போட்டியில் நிச்சயம் கேன் வில்லியம்சன் விளையாடுவார் என்பதால் இரண்டாவது போட்டியில் இருந்து எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.