சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஏ மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் பி ஆகியோருக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் வார்னர் அரைசதம் அடித்தார்.
உரிமையாளரின் ட்விட்டர் கணக்கு அதைப் பற்றிய ஒரு அப்டேட்ஸ் அளித்தது. மேலும் ஆட்டத்தின் போது வார்னர் பேட்டிங் வீடியோவை பகிர்ந்து கொண்டது.
வார்னர் மீது இன்று காலை நடந்த பயிற்சி முகாமில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. காலை அணியில வந்து இறங்கியதும், ஆடிய போட்டியில் அசத்தியுள்ளர்.
தொடக்கத்தில் இருந்தே அணியை பொறுத்தவரை வார்னர் பேட்ஸ்மேன் தானாக தேர்வு செய்யப்படுகிறார், ஆனால் முதல் சில போட்டிகளில் அவர் விளையாடலாமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
மார்ச் 28 ம் தேதி வரை இவர்கள் மீது தடை இருப்பதே இந்த குழப்பத்திற்கு காரணம்.
அதே காரணத்தினால், வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.
மேலும், அவர் மீண்டும் கேப்டன் கடமைகளை வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்தது.
ஆஸ்திரேலியா வாழ்நாள் முழுவதும் இருவரையும் கேப்டன் பதவியில் இருந்து தடை செய்துள்ளது.
வில்லியம்சன் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், புவனேஷ்வர் குமார் அணிக்கு கேப்டனாக இருப்பார்.
கடந்த ஆண்டு, ஐபிஎல் போட்டியில் வார்னர் விளையாட மாட்டார் என்று உறுதிபடுத்தப்பட்ட பின்னர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட வில்லியம்சனுக்கு துணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.