இன்று நடக்கவிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் உலககோப்பை தொடர் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா திரும்புகிறார்.
2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணிகளுக்கும் கிட்டத்தட்ட 12 போட்டிகள் முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கின்றன.
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு சரியாக ஒரு மாத காலத்தில் உலக கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டன.
இதனால், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடக்கும் சர்வதேச தொடர்களிலும் மற்றும் உலகக்கோப்பை பயிற்சிகளிலும் ஈடுபடுவதற்கு நாடு திரும்பி வருகின்றனர்.
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டு வீரர்கள் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து எதிரான தொடரில் ஆடுவதற்காக தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரும் நாடு திரும்பி பெரும் வெற்றிடத்தை கிளப்பியுள்ளனர்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நன்கு துவக்கம் அமைத்து வந்த ஜானி பைர்ஸ்டாவ் நாடு திரும்பியுள்ளதால் பெரும் பின்னடைவாக இருக்கும் நிலையில், இன்று பஞ்சாப் அணியை எதிரான போட்டிக்குப் பிறகு அணியின் துவக்க வீரர் மற்றும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் நாடு திரும்புகிறார்.
இவர் இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 611 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 7 அரைசதங்கள் அடங்கும்.
Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS
ஏற்கனவே, சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? தகுதி பெறாதா? என்ற இழுபறி இருக்கும் நிலையில் தற்பொழுது டேவிட் வார்னர் வெளியேறுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கும். வார்னர் இல்லாத போட்டிகளில் ஹைதராபாத் அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொருத்திருந்துதான் காண வேண்டும்