2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.
ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
அணிகளின் நிர்வாகிகள் அளித்த விருப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயாராக உள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது ஐ.பி.எல் போட்டி நடக்கும் என்பதால், இதுவரை போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
இதே போன்ற சூழலில் 2 முறை தென்னாப்பிரிக்கா மற்றும் துபாயில் ஐ.பி.எல் தொடர்கள் நடந்தது.2019 ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயரை அணி உரிமையாளர்கள் மாற்றியுள்ளனர்.
ஐ.பி.எல் டி-20 தொடரில் விளையாடி வந்த டெல்லி டேர்வில்ஸ் அணி, இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கவுதம் கம்பீரின் நீக்கத்திற்குப் பின், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான டெல்லி அணி ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியது.
டெல்லி லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்ட கம்பீர், நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் இருந்தே கழற்றிவிடப்பட்டார். நடப்பு ஆண்டு தொடக்கத்தில் டெல்லி அணியின் 50% பங்குகளை வாங்கியது ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம். டெல்லி அணியின் மீதான சாபம் நீங்க அணியின் பெயரை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்தது.
டெல்லியில் இன்று நடந்த விழாவில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றி புதிய பெயர் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டு புதுப்பொழிவுடன் களமிறங்க உள்ளது
டெல்லி கேபிடல்ஸ்:
ஹனுமா விஹாரி 2 கோடி, ஆக்ஸார் படேல் – 5 கோடி, இஷான்ட் சர்மா – 1.10 கோடி, அன்கூஸ் பைன்ஸ் – 20 லட்சம், கொலின் இங்கிராம் – 6.4 கோடி, ஷெர்பேன் ரூதர்போர்ட் – 2 கோடி, கெமோ பால் – 50 லட்சம், ஜலஜ் சக்ஸேனா – 20 லட்சம் , பந்தரு அய்யப்பா – 20 லட்சம்
அமித் மிஸ்ர, அவேஷ்கான்,கிறிஸ் மோரிஸ், கொலின் மன்ரோ, ஹர்ஷல் படேல் ஜெயந்த் யாதவ், கஜிஸோ ரபாடா, மனோட் கல்ரா, ப்ரித்வி ஷா, ராகுல்திவாடியா, ரிஷாப் பந்த், சந்தீப் லேமச்சேன், ஷிகார் தவான், ஷிரியாஸ் ஐயர், ட்ரென்ட் போல்ட் ஹனுமா விகார், ஆக்ஸார் படேல், இஷாந்த் சர்மா, அன்குஷ் பைன்ஸ், நாது சிங், கொலின் இன்ராம், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், கீமோ பால், ஜலஜ் சக்ஸேனா