பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சென்னை பவுலர்கள்; கொண்டாடும் ரசிகர்கள் !!

பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சென்னை பவுலர்கள்; கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையின் வெற்றிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் இறுதி போட்டியான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

சாம்பியனை தீர்மானிக்கும் இந்த இறுதி போட்டியானது ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டி காக் 29 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் இஷான் கிஷான் 23 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத கீரன் பொலார்டு 41 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாஹிர் மற்றும் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இன்றைய போட்டியில் மிக அற்புதமாக பந்துவீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

 

Mohamed:

This website uses cookies.