நாங்க மூன்று பேர் மட்டும் சிறந்த பந்துவீச்சாளர்கள்; மார் தட்டி கொள்ளும் ஜோஃப்ரா ஆர்சர்
டி.20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் ரசீத் கான், பும்ராஹ் மற்றும் தான் தான் சிறந்த பந்துவீச்சாளர்கள் என ஜோஃப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீச்சில் அசத்தி வருகிறார். அதேபோல் டி20 லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஜாப்ரா ஆர்சர் தற்போது ஏராளமான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். டி20 லீக்கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குரிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
82 போட்டிகளில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களுக்கு கீழ் கொடுத்து 105 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள ஜாப்ரா ஆர்சரிடம் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஜாப்ரா ஆர்சன் பதிலளிக்கையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்றால் முதலிடம் பும்ராவிற்குதான். 2-வது இடம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானுக்கு கொடுப்பேன். நான், பும்ரா, ரஷித் கான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள்.
பும்ரா அவரது பந்து வீச்சு ஸ்டைலில் யார்க்கர் வீசுவது சிறப்பானது. அவரது ஆக்சனில் ‘ஸ்லோ’ டெலிவரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவித பந்து வீச்சுக்கும் ஒரே மாதிரியான ஆக்சன்தான் இருக்கும். இதனால் ‘ஸ்லோ’ பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்’’ என்றார்.
களமிறங்க காத்திருக்கும் பும்ராஹ்;
நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியுடனான போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பும்ராஹ் காயமடைந்தார்.
இதனால் பும்ராஹ் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவாரா இல்லை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், பும்ராஹ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளார்.
பும்ராஹ்வும் மும்பை வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருதால் பெங்களூர் அணியுடனான அடுத்த போட்டியிலேயே பும்ராஹ் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.