ஜாஸ் பட்லர் மிகவும் ஆபத்தான வீரர்; ஸ்டீவ் ஸ்மித் சொல்கிறார் !!

ராஸ் டெய்லர் மிகவும் ஆபத்தான வீரர்; ஸ்டீவ் ஸ்மித் சொல்கிறார்

ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர் மிகவும் ஆபத்தானவர் என அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்மித் ஓராண்டு தடையால் கடந்த தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது ராஜஸ்தான் அணியில் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Jos Buttler of Rajasthan Royals during match forty nine of the Vivo Indian Premier League 2018

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது சிறப்பானதாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஜோஸ் பட்லர் உடன் இணைந்து விளையாடுவது சிறப்பானது. அவருடன் எதிர்முனையில் பேட்டிங் செய்தால் எனக்கு மிகவும் எளிதாக இருக்கும். அவர் ஒரு அற்புதமான வீரர். அத்துடன் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

ராஜஸ்தான் அணிக்காக சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ரசிகர்கள் அதிக அளவு மைதானத்திற்கு திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்.’’ என்றார்.

அணியில் இணைந்த வார்னர், ஸ்மித்;

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய சுமித், வார்னரின் தண்டனை காலம் முடிவடைந்ததை யொட்டி அவர்கள் மீண்டும் தங்களது ஐபிஎல் அணிகளோடு இணைந்து கொண்டனர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை இந்த மாதம் முடிகிறது. இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களோடு துபாயில் பயிற்சியில் இணைந்தனர்.

இந்த நிலையில் இருவரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள். இதற்காக இருவரும் தங்களது அணிகளோடு இணைந்து கொண்டனர். சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர் சன்ரைசஸ் ஐதராபாத் அணியிலும் ஆடுவார்கள்

 

Mohamed:

This website uses cookies.