இவ்வாறு தான் வீசவேண்டும் என நினைத்துகொண்டேன்: ரபாடா

தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டதில் தில்லி அணி 1 ஓவரில் 10 ரன்கள் எடுத்தது. ஆனால் கொல்கத்தா 7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் நிகில் நாயக், கிறிஸ்லீன் களமிறங்கினர்.
ஆனால் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. தில்லி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் திணறினர்.
நிகில் நாயக் 7, கிறிஸ் லீன் 20, ராபின் உத்தப்பா 11, அதிரடி வீரர் நிதிஷ் ராணா 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.
7.1 ஓவரின் போது 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது கொல்கத்தா.
பின்னர் இளம் வீரர் ஷுப்மன் கில்லும் 4 ரன்களோடு ஹர்ஷல், லேமிச்சேனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக்}ரஸ்ஸல் இணைந்து  ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ரஸ்ஸல் 5}ஆவது அரைசதம்: 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 62 ரன்களை விளாசிய ரஸ்ஸல், கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் அவுட்டானார். இது அவர் எடுத்த 5}ஆவது ஐபிஎல் அரைசதமாகும்.
தினேஷ் கார்த்திக் 17}ஆவது அரைசதம்: அவருக்கு பின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 50 ரன்களை எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் அவுட்டானார். இது தினேஷ் கார்த்திக் பெற்ற  17}ஆவது ஐபிஎல் அரைசதமாகும்.
பியுஷ் சாவ்லா 11 ரன்களில் வெளியேறினார் குல்தீப் யாதவ் 10 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களுடன் தனது ஆட்டத்தை நிறைவு செய்தது கொல்கத்தா. தில்லி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 2}40 விக்கெட்டை சாய்த்தார்.
6}ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள்: 10}ஆவது ஓவரின் போது 5 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்த கொல்கத்தா, ரஸ்ஸல்}தினேஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டது. இருவரும் சேர்ந்து 95 ரன்களை குவித்தனர்.
186 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி அணி தரப்பில் ஷிகர் தவன்}பிரித்வி ஷா களமிறங்கினர். அதிரடியாக ஆட முயன்ற தவன் 16 ரன்களுக்கு சாவ்லா பந்தில் அவுட்டானார். அதன்பின் பிரித்வி ஷா}கேப்டன் ஷிரேயஸ் ஐயர் இணைந்து ரன்களை விளாசினர்.
11}ஆவது ஓவரின் போது ஸ்கோர் 100}ஐ கடந்தது.  பிரித்வி ஷாவும் தனது 3}ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
அப்போது ஷிரேயஸ் ஐயர் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில், ரஸ்ஸல் பந்தில் அவுட்டானார்.
பின்னர் பிரித்வி ஷாவுக்கு துணையாக ஆட வந்த ரிஷப் பந்த் 11 ரன்களுடன் குல்தீப் பந்துவீச்சில் வெளியேறினார்.
1 ரன்னில் சதத்தை தவறவிட்ட பிரித்வி: தொடக்கம் முதலே அபாரமாக ஆடி வந்த பிரித்வி ஷா 3 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 99 ரன்களை எடுத்து லாக்கி பெர்குஸன் பந்துவீச்சில் அவுட்டானார். 1 ரன்னில் சதத்தை தவற விட்டார் பிரித்வி.
6 பந்துகளில் 6 ரன்கள்: தில்லி அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹனுமா விஹாரி 2 ரன்களுடன் அவுட்டானார். பின்னர் 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற சிக்கலான நிலை உருவானது. காலின் இங்கிராம் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து விட்டு இரண்டாவதாக ஓட  முயன்றபோது ரன் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு தில்லி அணி 185 ரன்களை எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2}41 விக்கெட்டை வீழ்த்தினார். இரு அணிகளும் 185 ரன்களை எடுத்து சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய தில்லி 1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை எடுத்தது. 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்களையே எடுத்து தோல்வியடைந்தது.

Mohamed:

This website uses cookies.