அஸ்வின் செயலை வைத்து விழிப்புணர்வு செய்ய துவங்கிய காவல்த்துறை !!

அஸ்வின் செயலை வைத்து விழிப்புணர்வு செய்ய துவங்கிய காவல்த்துறை

அஸ்வின் செய்த அவுட்டை வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையினர் நூதனமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில், அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை பாதியில் நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.

அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

இந்நிலையில், அஸ்வின் செய்த அவுட்டை வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையினர் நூதனமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தங்களது ட்விட்டரில், சிக்னலில் கோட்டை தாண்டும் வாகனம் மற்றும் அஸ்வின் செய்த மான்கட் அவுட் ஆகிய இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

சிக்னலில் க்ரீஸை கடந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அந்த புகைப்படம் இருந்தது.

அஸ்வினி செயல் மிக மட்டமானது – எம்.சி.சி

மன்கட் அவுட் விவகாரத்தில் அஸ்வின் செய்தது சரி என்று கருத்துதெரிவித்த லண்டனைச் சேர்ந்த பாரம்பரிய  எம்சிசி(மெர்லிபோன் கிரிக்கெட் கிளப்) கிளப் 24 மணிநேரத்துக்குள் பல்டி அடித்து, அஸ்வின் செய்தது ஸ்பிரிட் ஆப் தி கேமுக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளது.

 லண்டனில் உள்ள பாரம்பரிய புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப்பான எம்சிசி, அஸ்வினின் செயலை ஆதரித்து இருந்தது. எம்சிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ” பந்துவீச்சாளர் பந்துவீசும் வரை நான்-ஸ்ட்ரைக்கர் கிரீஸ்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நான்-ஸ்ட்ரைக்கர் இருந்தால், எச்சரிக்கை செய்யாமல் பந்துவீச்சாளர் அவுட் செய்வதில் தவறில்லை.ஆதலால் அஸ்வின் செய்தது சரிதான்” எனத் தெரிவித்திருந்தது.

Mohamed:

This website uses cookies.