உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா: லசித் மலிங்கா புகழாரம்!

உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என லசித் மலிங்கா புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கடைசி ஓவரில் மிரட்டிய மலிங்கா ஸ்டாராக ஜொலித்தார்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.

லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.

இந்நிலையில் மும்பையில் நடந்த 31வது லீக் போட்டியில் மும்பை அணி, பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.

 

எட்டக்கூடிய இலக்கை துரத்திய மும்பை அணி19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போது களத்தில் இருந்த அதிரடி பேட்ஸ்மேன் பண்டியா, சுழற் பந்துவீச்சாளர் நெகி வீசிய 19வது ஓவரில் 2வது பந்து முதல் 5வது பந்து வரை தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். அதில் 2 சிக்ஸர், 2 ஃபோர் அடங்கும். அதே ஓவரில் 22 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார் பண்டியா.

ஹர்திக் பண்டியா 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதைக் கண்ட சக மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா, போட்டிக்கு பின் அளித்த பேட்டியில், எப்படி நன்றாக ஆடுகிறார்! அவருக்கு உலகக்கோப்பையில் எப்படி பந்து வீசுவது என நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றார்.

தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வந்தாலும், அனைத்து நாடுகளும் உலகக்கோப்பை அணிகளை அறிவித்து பயிற்சிகளை தொடங்க உள்ளது. ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஐபிஎல்-லை தாண்டி உலகக்கோப்பை குறித்து சிந்தித்துள்ளார் மலிங்கா.

இப்போட்டியில் முந்தைய போட்டிகளில் சொதப்பிய மலிங்கா, இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.