ரஸல் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்கட்டும், ஆனால் சிங்கில் விடக்கூடாது: சஹாருக்கு அறிவுரை கூறிய தல தோனி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி சென்னை பந்துவீச்சாளர் தீபக் சாகருக்கு வித்தியாசமாக அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது 19வது ஓவரில் இறுதிப் பந்தில் ரஸல் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கட்டும் ஆனால் ஒரு  ரன் மட்டும் விட்டுவிடக்கூடாது என்று தீபக் சாகரிடம் தோனி கூறியுள்ளார். ஏனெனில் ஒரு ரன் அடித்தால் இருபதாவது ஓவருக்கு மீண்டும் அவர் வருவார். 6 பந்துகளில் 6 பவுண்டரி அடிக்க கூடும். இதனால் சிக்ஸர் அல்லது பவுண்டரி போகட்டும் அந்த கடைசி பந்தில் சிங்கில் ரன் மட்டும் விடக்கூடாது என தன்னிடம் கூறியதாக தீபக் சாகர் தற்போது கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை ஐபிஎல் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களையே எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்து வென்றது. ரஸ்ஸல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். சென்னை  வீரர் சஹார் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் புதிய ஐபிஎல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நேற்று 4 ஓவர்கள் வீசிய சஹார், 3 விக்கெட்டுகள் எடுத்து 20 ரன்கள் கொடுத்தார். இதில் 20 டாட் பந்துகள்! ஐபிஎல் வரலாற்றில் 24 பந்துகள் வீசி அதில் 20 டாட் பந்துகளாக வீசிய பந்துவீச்சாளர் யாருமில்லை. அவருடைய 24 பந்துகளின் விவரம்:

 

ஐபிஎல் போட்டியில் அதிக டாட் பந்துகளை வீசியவர்கள்

தீபக் சஹார் – 20 (CSK v KKR)
ஆஷிஷ் நெஹ்ரா – 19 (DD vs KXIP)
முனவ் படேல் – 19 (RR vs KKR)
ஃபிடல் எட்வர்ட்ஸ் – 19 (DC vs KKR)

ஆஷிஷ் நெஹ்ரா, முனவ் படேல், ஃபிடல் எட்வர்ட்ஸ் ஆகிய மூவரும் 2009-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் அந்தச் சாதனைகளைப் படைத்தார்கள். ஆனால் இந்தியாவில், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஒரு ஆடுகளத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் சஹார்.

இதுதவிர கடந்த 2018 முதல் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். வேறு எந்த பந்துவீச்சாளர்களை விடவும் பவர்பிளேயில் மிக அதிகமாக 301 பந்துகளை வீசியுள்ள தீபக் சஹார், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி – 6.71.

Sathish Kumar:

This website uses cookies.