சென்னை vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12 வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 17 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 18வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் இரண்டு அல்லது மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
டூவைன் பிராவோ காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டியில் இருந்து விலகியுள்ள டூவைன் பிராவோவிற்கு பதிலாக இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை சேர்ந்து ஸ்காட் அறிமுக வீரராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதே போல் சேன் வாட்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் டூ பிளசிஸ் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது (unpredictable கேப்டன் என்று பெயர் எடுப்பதற்காகவே அஸ்வின் தேவை இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல), கடந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட சாம் குர்ரான் இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார் என தெரிகிறது. அதே போல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுல் இன்றைய போட்டியில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடுவார் என எதிபார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளும் சமபலம் கொண்டது தான் என்றாலும், இரு அணிகள் இடையேயான முந்தைய போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.