ஐபிஎல் போட்டியை இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழா என்று கூறலாம். பள்ளிப் பொதுத்தேர்வுகள் முடிவதற்கும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கும் சரியாக இருக்கும். அதேபோன்று இந்த ஆண்டும் பள்ளித்தேர்வுகள் முடிய, ஐபிஎல் தொடங்குகிறது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் என ஒன்று பெருமளவில் பேசப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கூட கிரிக்கெட்டிலிருந்து சிதறாது என்று கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்..
2019ஆம் ஆண்டு ஐபிஎல் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.ஞாயிறு அன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன,
இந்த போட்டிக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
#1 ஷிகர் தவான்
இதுவரை ஹைட்ரபாத் அணிக்காக ஆடிவந்த தவான், இம்முறை டெல்லி அணிக்காக ஆட இருக்கிறார். நிச்சயம் கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.
#2 பிரிதிவ் ஷா
அண்டர் 19 கேப்டன் ஷா, தற்போது இந்திய டெஸ்ட் அணியில் கலக்கினார். அனால், காயம் காரணமாக சில தொடர்களை தவற விட்டார். குணமடைந்து டெல்லி அணியில் கலக்க காத்திருக்கிறார்.
#3 கொலின் இங்க்ராம்
இக்ராம் சிறப்பான நிலையில் உள்ளார். முன்றொ கடந்த சில தொடர்களாக சரிவர ஆடவில்லை. அதனால் இவருக்கு இடம் கிடைக்கும்.
#4 ஷ்ரேயஸ் அய்யர்
அணியின் கேப்டன், காம்பிருக்கு பிறகு சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் கடந்த முறை லீக் சுற்றுடன் வெளியேறியது. இம்முறை புதிய உத்வேகத்துடன் களமிறங்க காத்திருக்கிறது.
#5 ரிஷப் பண்ட்
இளம் வீரர் இந்திய அணியில் தனது திறமையை வெளிப்படுத்த தவறினாலும், இங்கு மீண்டும் சிறப்பாக ஆடி தான் யார் என்பதை நிரூபிப்பர்.
#6 அக்சர் படேல்
அக்சர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பெற்றார். பின்னர் சில சொதப்பலான ஆட்டத்தால் இடத்தை தவற விட்டார். தற்போது மீண்டும் இடம்பெற காத்திருக்கிறார். அதற்க்காக முழு திறமையை டெல்லி அணியில் காட்ட உள்ளார்.
#7 ஹர்சல் படேல்
மற்றுமொரு ஆல்ரவுண்டரான ஹர்சல், கடந்த முறை ஏமாறினாலும், இம்முறை உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளதால், அதே நிலையை டெல்லியிலும் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#8 அமித் மிஸ்ரா
அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் தனது அணிபவத்தால் வெற்றிக்கு உதவுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#9 சந்தீப் லாமினிச்சே
நேபால் நாட்டின் சுழற்பந்துவீச்சாளர் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் சென்ற ஆண்டு கலக்கினார். இந்த ஆண்டு அதே நிலையை தொடர காத்திருக்கிறார்.
#10 ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் அணியின் முன்னணி விக்கெட் வீழ்த்துபவராக திகழ்ந்தார். இந்த ஆண்டும் அதே நிலையை தொடர்ந்தால் அணிக்கு வெற்றி தான்.
#11 காகிஸோ ரபாடா
தென்னாபிரிக்கா இளம் வேகப்பந்துவீச்சாளரின் வேகம் அனைவரும் அறிந்ததே. போல்ட் உடன் இணைந்து வெற்றிக்கு வித்திடுவார் என கணிக்கப்படுகிறது.