ஹைதராபாத் vs டெல்லி: பலபரிச்சையில் வெற்றி யார் பக்கம்??

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 30வது போட்டி நடைபெற உள்ளது.

இதில் ஹைதராபாத் மற்றும் டெல்லி இரு அணிகளும் மோதுகின்றன. இதில் பலம் மிக்க கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி நல்ல நிலையில் உள்ளது டெல்லி அணி.

அதேபோல, பஞ்சாப் மற்றும் மும்பை அணியிடம் மிக மோசமான தோல்வியை தழுவிய ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றிப்பதைக்கு வருவதற்கு இந்த போட்டியை வெல்லவேண்டியை சூழ்நிலையில் உள்ளது.

இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையை பெற இப்போட்டி முக்கியமான ஒன்றாகும்.

சாத்தியமான வீரர்கள்

ஹைதராபாத் அணி – டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் (கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான், ரஷிட் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்

டெல்லி அணி – தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (கீப்பர்), கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், சந்தீப் லேமிச்சானே, ராகுல் திவாடியா / அமித் மிஸ்ரா, கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

நேருக்கு நேர்

போட்டிகள் – 13
ஹைதராபாத் – 9
டெல்லி – 4

சாத்தியமான சிறந்த வீரர்கள்

கேன் வில்லியம்சன், ரஷீத் கான் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்| ப்ரித்வி ஷா, தவான், ரபாடா – டெல்லி கேபிட்டல்ஸ்

ஒளிபரப்பு விவரங்கள்

டிவி –  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD

லைவ் ஸ்ட்ரீமிங் –  ஹாட் ஸ்டார்

இந்த மைதானம் இரண்டாவது பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். பெரும்பாலும், ஹைதராபாத் அணி வெல்லும் என கணிக்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.