பஞ்சாப் vs ராஜஸ்தான்: ராஜஸ்தான் அணியின் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!!

Rajasthan Royal players celebrates the wicket of Rohit Sharma captain of Mumbai Indians during match 27 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Mumbai Indians and the Rajasthan Royals held at the Wankhede Stadium in Mumbai on the 13th April 2019 Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

ஐபிஎல் தொடரின் 32வது போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் ஒன்றிய மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன.

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடும் ராஜஸ்தான் அணியின் சாத்தியமான 11 வீரர்களின் பட்டியலை காண்போம்.

ரஹானே

ராஜஸ்தான் அணியின் கேப்டனான ரஹானே இந்த தொடரில் இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. இந்திய அணியிலும் சொதப்பியதால் உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணி தொடரில் நீடிக்க மும்பை அணியுடன் வென்றே ஆகா வேண்டும்.

ஜாஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனான ஜாஸ் பட்லர் வழக்கம் போல இன்றைய போட்டியிலும் மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியுடன் விளாசினார். பஞ்சாப் அணியுடன் அதே விளாசலை தொடர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித்

ஒரு வருட தடை காலத்திற்கு பிறகு ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் எதிர்பார்த்தளவிற்கு இல்லை. கேப்டன் ரஹானேவிற்கு இவர் கை கொடுத்தால் மட்டுமே அணியை மீட்க முடியும்.

சஞ்சு சாம்சன்

இந்த தொடரில் ஒரு சதம் விளாசியுள்ளார். அதன்பிறகு மிகப்பெரிய ஆட்டம் இவரிடமிருந்து வரவில்லை. பஞ்சாப் அணிக்கான ஆட்டத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்க படுகிறது.

பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. இந்த போட்டியில் குணமடைந்து அணியில் இணைவார் என தெரிகிறது.

ராகுல் த்ரிபாதி

இளம் வீரரான ராகுல் த்ரிபாதி அணிக்கு இதுவரை சொதப்பலான ஆட்டம் மட்டுமே கொடுத்துள்ளார். நல்ல ஆட்டத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தவால் குல்கர்னி

தவால் குல்கர்னி  போட்டிக்கு ஒரு விக்கெட் என எடுத்தாலும், ரன்களை வாரி வழங்குகிறார் . மூத்த வீரர் அணிக்கு பங்களிப்பை கொடுத்தால் மட்டுமே பிளே ஆப் சுற்று செல்வது குறித்து சிந்திக்க முடியும்.

Photo by: Shaun Roy / SPORTZPICS / IPL

க்ருஷ்ணப்பா கவுதம்

க்ருஷ்ணப்பா கவுதம் காயம் காரணமாக வெளியில் இருந்து பின் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் உள்ளே வந்தார். வரும் போட்டியில் கட்டாயம் ஆடியே ஆக வேண்டிய சூழலில் உள்ளார்.

ஸ்ரேயஸ் கோபால்

இளம் வீரரான ஸ்ரேயஸ் கோபால் இந்த தொடரில் மிக அற்புதமாக பந்துவீசி கோஹ்லி, டி வில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தியுள்ளார். அணியின் சூழல் பந்துவீச்சில் நம்பிக்கை தந்து வருகிறார்.

ஜோஃப்ரா ஆர்சர்

ஜோஃப்ரா ஆர்சர் இந்த தொடரில் அனைத்து எதிரணிகளுக்கும் கடும் சவாலாக இருந்துள்ளார். விக்கெட்டுகளை சரியான நேரத்தில் வீழ்த்தி அணிக்கு பலம் அளிக்கிறார்.

ஜெயதேவ் உனாட்கட்

ஜெயதேவ் உனாட்கட் இதுவரை நம்பிக்கை தரும் விதமாக ஆடவில்லை. ஆனால், இவரின் வேகப்பந்துவீச்சு அணிக்கு கட்டாயம் தேவை என்பதை உணர தவருகிறார். அதை திருத்திக்கொண்டால் நன்கு செயல்படலாம்.

Prabhu Soundar:

This website uses cookies.