ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலகலாம நடைபெற்று வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 36 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 37வது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
டெல்லி அணி
இஷாந்த் சர்மா , ஷிகார் தவான் , கொலின் இன்கிராம் , ட்ரென்ட் போல்ட் , அக்சர் படேல் , ஸ்ரேயாஸ் ஐயர் , ரபாடா , ராகுல் டெவடியா, ரிஷாபத் பந்த் (விக்கெட் கீப்பர்) , கீமோ பவுல் , பிருத்வி ஷா
பஞ்சாப் அணி
கிறிஸ் கெய்ல் , ரவிச்சந்திரன் அஸ்வின், கேட்ச் , மாயன்க் அகர்வால் , மன்டிப் சிங் , முகம்மது ஷமி , லோகேஷ் ராகுல் , அன்கிட் ராஜ்புட் , நிக்கோலஸ் பூரன் (வி.கே) , சர்பாராஸ் கான் , சாம் குர்ரான் , முஜீப் உர் ரஹ்மான்
இந்த ஆட்டத்தில்,
இந்த வருட ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாகத் தேர்வாகியுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்தபோது வருண் சக்கரவர்த்தியின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். விரைவில் குணமாகி வருவார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஐபிஎல் ஏலத்தில் 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி முதல் ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார் சுனில் நரைன்.
அந்த ஆட்டத்துக்குப் பிறகு வருண் சக்கரவர்த்தி, பஞ்சாப் அணி விளையாடிய எந்த ஓர் ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.