ஹைதராபாத் vs கொல்கத்தா ; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !!

ஹைதராபாத் vs கொல்கத்தா ; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா 

ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா ஹைதராபாத் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களம் காண உள்ளது. பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கரியப்பா, யார்ரே பிரித்விராஜ் போன்ற வீரர்கள் இன்றைய போட்டியின் மூலம் அறிமுக வீரர்களாக களம் காண உள்ளனர்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

கிரிஸ் லின், சுனில் நரைன், சுப்மன் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், தினேஷ் கார்த்திக், பியூஸ் சாவ்லா, கரியப்பா, ஹேரி கர்னே, யார்ரே ப்ரிதீவ்ராஜ்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; 4

டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், தீபக் ஹூடா, யூசுப் பதான், ரசீத் கான், சபாஷ் நதீம், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அஹமது.

 

Mohamed:

This website uses cookies.