டெல்லி அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று துவங்கியது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியான இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, டிரண்ட் பவுல்ட் போன்ற சீனியர் வீரர்களும், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், ப்ரிதீவ் ஷா போன்ற இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில், குவிண்டன் டி காக், க்ரூணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ஷிகர் தவான், ப்ரிதீவ் ஷா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விகெட் கீப்பர்), காலின் இன்கிராம், கீமோ பவுல், அக்ஷர் பட்டேல், ராகுல் திவேதியா, காகிசோ ரபடா, டிரண்ட் பவுல்ட், இஷாந்த் சர்மா.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
குவிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், க்ரூணல் பாண்டியா, யுவ்ராஜ் சிங், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெங்கன், ரசீத் சலாம், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.