பெங்களூர் vs பஞ்சாப் ; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?

பெங்களூர் vs பஞ்சாப் ; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?

.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 41 போட்டிகள் நிறைவைடைந்துள்ள நிலையில், 42வது போட்டியான இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த தொடரின் துவக்கத்தில் இருந்து பல படுதோல்விகளை சந்தித்தாலும், கடந்த இரண்டு போட்டிகளிலும் த்ரில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் அதிக உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி களமிறங்க உள்ளதால் பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

பார்த்தீ பட்டேல், விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சிறந்து விளங்கி வருகின்றனர், பந்துவீச்சில் மட்டும் பெங்களூர் அணி கவனம் செலுத்தும் பஞ்சாப் அணிக்கு ஓரளவிற்கு நெருக்கடியை கொடுக்கும்.

அதே போல் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி பந்துவீச்சி, பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அஸ்வின் தனது கேப்டன்சியை முன்னேற்றி கொண்டால் மட்டுமே பஞ்சாப் அணியால் அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரு அணிகள் இடையேயான முந்தையை போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

உத்தேச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கிரிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ரவிச்சந்திர அஸ்வின், சாம் குர்ரேன், ஹர்ப்ரீட் பிரார், முருகன் அஸ்வின், ஹர்தஸ் வில்ஜியோன், முகமது ஷமி.

Mohamed:

This website uses cookies.