ஹைதராபாத்தை பழீ தீர்க்குமா ராஜஸ்தான்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல், ஹைதராபாத் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 45வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியு, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஜானி பாரிஸ்டோ நாடு திரும்பிவிட்டதால் அவருக்கு பதிலாக சஹா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார், அதே போல் சித்தார்த் கவுல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர், யுசூப் பதான் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டொக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் நாடு திரும்பிவிட்டதால் அவர்களுக்கு பதிலாக ஆஸ்டன் டர்னர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ரியான் பிராக், ஆஸ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்டூவர்ப் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட், வருண் ஆரோன், ஓஸ்னே தாமஸ்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், ஷாகிப் அல் ஹசன், விரக்திமான் சஹா, தீபக் ஹூடா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், கலீல் அஹமது.