சென்னை vs டெல்லி; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை துவங்கிய இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது போட்டியான இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டெல்லியின் பிரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியை போன்ற வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காண்கிறது.
அதே வேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் பவுல்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ராவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
பவுல்ட்டை தவிர கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் களம் காண உள்ளனர்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
ஷேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரிதிவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், காலின் இன்கிராம், ரிஷப் பண்ட், கீமோ பவுல், அக்ஷர் பட்டேல், ராகுல் திவேதியா, அமித் மிஷ்ரா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா.