ஹைதராபாத் vs ராஜஸ்தான்; முதலில் பேட்டிங் செய்கிறது ஹைதராபாத்
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 8வது போட்டியான இன்றைய போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
காயம் காரணமாக ஹைதராபாத் அணியின் கடந்த போட்டியில் விளையாடாத கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். அதே போல் ஷாபாஷும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஷாகிப் அல் ஹசன் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஹைதராபாத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
அஜிக்னியா ரஹானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் த்ரிபாதி, க்ருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்சர், ஜெயதேவ் உனாட்கட், ஸ்ரேயஸ் கோபால், தவால் குல்கர்னே.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், யூசுப் பதான், மணிஷ் பண்டே, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா, சித்தார்த் கவூல்.