பந்துவீச்சினை சரியாக செய்ய பயிற்சி செய்து வருகிறேன் : கேதர் ஜாதவ்

பந்துவீச்சினை சரியாக செய்ய பயிற்சி செய்து வருகிறேன் என சென்னை வீரர் கேதர் ஜாதவ் கூறியுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல் 2019) போட்டிகளில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு (9) முறை இடம் பெற்ற சாதனையுடன் திகழும், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிசிசிஐ சார்பில் கடந்த 2008-இல் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டன. தற்போது நடைபெறுவது 12-ஆவது சீசன் போட்டியாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012), மும்பை இந்தியன் (2013), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2014), மும்பை இந்தியன்ஸ் (2015), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), மும்பை இந்தியன்ஸ் (2017), சென்னை சூப்பர் கிங்ஸ் (2018) ஆகியவை முந்தைய சீசன்களில் பட்டம் வென்ற அணியாகும்.
கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் அணிகளிலேயே தொடர்ந்து நிலைத்தன்மையுடன் ஆடி வரும் சிறப்புடையது.

சிஎஸ்கே அணியின் பிரதான பலமே அதன் கேப்டன் தோனி தான். பயிற்சியாளர் பிளெமிங்குடன் இணைந்து, சீரான முடிவுகளை தோனி எடுப்பதால், அணியின் கவனமும் திசை திரும்பாமல் உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு வீரர்கள் தங்கள் பங்கை ஆற்றி சிஎஸ்கேவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
சிஎஸ்கே அணி முந்தைய சீசனில் இடம் பெற்றிருந்த 23 வீரர்களை அணியில் அப்படியே வைத்துள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் 70 சதவீதம் வெற்றியை குவித்துள்ளது சென்னை.

சிஎஸ்கே அணிக்கு மிகவும் பலம் சேர்ப்பது பேட்டிங் ஆகும். தோனி, பிராவோ, மிச்செல் சான்ட்னர், ஜடேஜா, ஷேன்வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோர் பேட்டங்கில் அபாரமாக ஆடி வருகின்றனர். ஜாதவ் அணியில் உள்ளது பேட்டிங்கை மேலும் வலுவாக்கி உள்ளது.


அதே நேரத்தில் கடைசி ஓவர்களில் பந்துவீச்சு, பீல்டிங் போன்றவை சிக்கலான நிலையில் உள்ளன. ரெய்னா-மெக்கல்லம்-டுபௌஸிஸ் ஆகியோர் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவர். எனினும் பீல்டிங்கில் ஒருங்கிணைந்து செயல்பட பயிற்சியாளர் ஹஸி வலியுறுத்தியுள்ளார். பந்துவீச்சில் சர்துல் தாகுர், மொகித் சர்மா, தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா இருந்தாலும் சற்று பலவீனமாகத் தான் உள்ளது. 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Sathish Kumar:

This website uses cookies.