டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம்!!

Ravichandran Ashwin captain of Kings XI Punjab celebrates win during match 4 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Rajasthan Royals and the Kings XI Punjab held at the Sawai Mansingh Stadium in Jaipur on the 25th March 2019 Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் குறித்த நேரத்தை விட மிகவும் தாமதமாக வந்துபந்து வீசியதற்காக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 37வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் பணிகளும் டெல்லியில் உள்ள ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் இருவரும் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல்  12 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். துவக்கத்தில் நிதானமாகவும் பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கெயில் 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மில்லர் (7), மயங்க் அகர்வால் (2), சாம் கர்ரன் (0), அஸ்வின் (16) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மந்தீப் சிங் (30) சற்று ஆறுதல் தரும் இடமாக ஆடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக பிரித்வி ஷா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இந்த ஜோடி இரண்டாவது இடத்திற்கு 92 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் இறுதிவரை சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி அணி.

இப்போட்டியில் குறித்த நேரத்தில் பந்து  மிகவும் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் அபராதம் விதித்தது.

போட்டி முடிந்த பின் அஸ்வின் கூறியதாவது , “எங்களுக்கு இரண்டாவது பேட்டிங் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் துரதிஸ்டவசமாக டாஸ் இழந்ததால் முதல் பேட்டிங் கிடைத்தது.  12 – 13 ஓவர்களில் பனி மிகவும் அதிகமாக இருந்தது. அதன் காரணமாகவே எங்கள் வீரர்கள் பில்டிங் செய்ய தடுமாறினர். இதனால், இறுதியில் தோல்வியையே தழுவ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட்டுள்ளோம்” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.